- Home
- Wishes Quotes In Tamil
- Birthday Wishes In Tamil
Best and Unique Birthday Wishes In Tamil
Wish your loved ones a very happy and prosperous birthday - Beautiful birthday wishes in tamil
Birthday Wishes In Tamil
உன் உள்ளம் முழுக்க உண்மை கொண்டு உரிமை கொண்டு உயிரில் இணைந்த அன்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரிவில் கூட பிரியாமல் வைத்த பிரியம் குறையாமல் நீண்டு கொண்டிருக்கும் என் அன்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சொந்தங்களை விட நெருக்கம் கொள்ளும் அன்பு நண்பர்களுக்கு உள்ளது, என் அன்பு நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கவிதை கூட நாணம் கொள்ளுகிறது உனக்கான நாளை நான் வர்ணிக்க நினைகையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே

மிகப்பெரிய மகிழ்ச்சி தரும் தருணம் பிறப்பு மட்டுமே என் இனிய நட்பின் பிறந்தநாளுக்கு என் பாசம் மிகுந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்வில் சிறு சிறு சந்தோஷங்கள் சிறு சிறு மகிழ்ச்சிகள் அனைத்தும் கிடைக்கும் இடம் நண்பர்களே பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

வருடங்கள் எவ்வளவு ஆனாலும் சிறு சிறு செய்கைகள் போதும் மகிழ்ச்சியை நிலக்க வைக்க அன்பிற்கு மகிழ்ச்சி நிறைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அனைத்து வாழ்வும் பல ஏற்ற இறக்கங்கள் கொண்டே நிர்ணயிக்கபடுகிறது அனைத்து இறக்கங்களும் நிறைவுற்று உன் வாழ்வு ஏற்றங்கள் பெற பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பு உள்ளம் கொண்ட தோழியே உன் அன்பு நிலைக்க உன் திறமை சிறக்க வாழ்வு செழிக்க இறைவன் அருள் பெற பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மலர் போன்ற என் அன்பு தோழமைக்கு உன் புன்னகை மாறாது என்றும் நிலைத்திருக்க அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்வில் அனைத்து கடினமான நிலைகளை கடக்கும் தன்னம்பிக்கை இறைவன் தங்களுக்கு வழங்கட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பிற்கு அன்பு சேர்க்கும் என் தோழமைக்கு இனிய பிறந்தநாள் என்றெண்டும் இனிக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆசைக்கு முற்று வைத்து அன்பிற்கு தொடக்கமாய் உறவாய் உயிராய் இருக்கும் அன்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்பமும் துன்பமும் வாழ்வின் அங்கம் அனைத்து சந்தற்பங்களையும் துணிந்து எதிர்கொள்ள என் நட்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஒவ்வொரு வருடமும் நாளின் எண்ணிக்கை மட்டுமே மாறுகிறது உறவில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நட்புக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முகமோ முகவரியோ முடிவு செய்வாதில்லை எந்த உறவாய் யார் அமைய வேண்டும் என்று எதிர்பாராத என் உறவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நிலவின் சாயல் கொண்டு மலரின் வாசம் கொண்டு குழந்தை மனம் கொண்ட எனது அன்பு தோழமையே பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இப்புது நாளின் தொடக்கத்தில் வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருக இறைவனின் அருளும் துணை கொள்ள பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மலரின் இதழ் போன்ற மென்மையான மனம் கொண்ட என் அன்பு தோழிக்கு மலரின் மணம் போன்று வாழ்வு மலர பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் அன்பு தோழமைக்கு, இந்த இனிய நாளின் தொடக்கத்திற்கு மனம் உவந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரம்மனின் கற்பனைகள் முழுவதையும் கொள்ளையடித்த அழகே!! உன் பிறந்த நாள் அவன் கற்பனைகளை தொலைத்த நாள்...

உன் வாழ்க்கை இனிக்கும் கரும்பை போல... இன்னும் நூறு வருடம் ஆனாலும் கூட தித்திக்கட்டும் இன்று நீ கொண்டாடும் உன் பிறந்த நாள் போல...

வாழ்த்து அட்டைகளில் வாசகம் தீட்டி தோற்றுபோய் என்னையும் ஓர் கவிஞனாகியது உன் பிறந்த நாள்....

"குறிஞ்சி பூப்பது 12 வருடத்திற்கு ஒரு முறையாம்... யார் சொன்னது
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கிறது
அது உன் பிறந்த நாள் தான்..."

பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்கள் நேர்த்தியான தோற்றம் சில சமயங்களில் தந்தை நேரத்துடனான போரில் வெற்றி பெறுகிறது என்பதற்கான சான்றாகும்.

வாழ்க்கையின் பிரகாசமான சந்தோஷங்கள் உங்கள் பாதையை வெளிச்சமாக்குகின்றன, மேலும் ஒவ்வொரு நாளின் பயணமும் உங்கள் கனவுகளுக்கு உங்களை நெருங்கச் செய்யலாம்

அம்மா, என் வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளுக்கும் எதிராக போராட எப்போதும் எனக்கு உதவும் பலம் நீ தான். நான் உன்னை நேசிக்கிறேன் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
