- Home
- Wishes Quotes In Tamil
- Motivational Quotes In Tamil
Best and Unique Motivational Quotes in Tamil
Send a Motivational Quotes in Tamil everyday for your friends and family to remind your love for them always. People in life are precious.
Motivational Quotes In Tamil
என்று நீ உன்னை முழுமையாக கண்டு கொள்கிறாயா அன்றுதான் உன் வாழ்வில் வெற்றிக்கான திறவுகோலை கண்டுபிடிக்க முடியும்

ஆயிரம் கைகள் உன்னை தூக்கி எறிந்த போதிலும் உன் கைகள் என்றும் உன்னை தூக்கி எறிந்தது இல்லை ஏன் கவலை கொள்கிறாய் வெற்றி நிச்சயம் உழைப்பாய் என்றே உன் தன்னம்பிக்கையோடும்

உன்னை விட சிறந்தவர்கள் அனைவரும் என்ற எண்ணத்தை முதலில் நீ மாற்றிக் கொள்ள வேண்டும் ஒரு எண்ணத்தை மட்டும் நீ உன் நினைவில் நிறுத்திக்கொள் அது என்னவென்றால் உனக்கு சிறந்தவன் நீ மட்டும் தான் என்பதை

ஆயிரம் பேர் உன்னை சுற்றி இருக்கிறார்கள் என்பதனால் நீ பலசாலி அல்ல என்று நீ தனித்து நின்று அனைத்தையும் சந்திக்க தயாராகிறாயோ அன்றுதான் நீ ஒரு பலசாலி

நான் சிகரத்தை ஒருமுறையாவது தொட்டு விட மாட்டேனா என்று ஏங்கிய காலங்கள் நிறைய உண்டு ஆனால் இன்று இந்த சிகரத்தில் இருந்து ஒன்றை பதிவு செய்கிறேன் என்ன தெரியுமா நம் கனவை நினைவாக்க என்று நம் மனதார உழைக்கிறோமோ அன்று கட்டாயம் வந்து வெற்றி நிச்சயம் ஆக நமக்கு கிடைக்கும் என்பதே

ஒன்றை நினைவில் கொள் நண்பா எளிதில் கிடைக்காத எந்த வீட்டையும் நீண்ட நாள் நிலைப்பதில்லை

ஒரு நாள் நான் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைப்பேன் எனது வெற்றியின் உச்சத்தை காண

உன்னை விட நான் உயர்ந்தவனாய் சிறந்தவனாய் மாறுவேன் என்று நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் நான் ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் நான் என் வாழ்க்கையை சிறப்பித்துக் கொள்வேன் என்பதை நான் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்

ஆயிரம் உறவுக்காரர்கள் இருப்பார்கள் ஆயிரம் கருத்துகளை பதிவு செய்வார்கள் ஆனால் நீ ஒன்றை மட்டும் நினைவில் கொள் உன் கருத்து என்னவோ அதை மட்டும் உன் மனதில் நீ பதிவு செய்து கொள்

உன்னை விட நான் சிறந்தவன் என்று சொல்லவில்லை உன்னிடம் இல்லாத அந்த தன்னம்பிக்கை என்பதில் நான் என்றும் கர்வம் கொள்வேன்

சிகரத்தின் உச்சியை அடையத்தான் அனைவரும் விரும்புகிறோம் ஆனால் சிகரமாகிய மலை ஏறுவதில் தான் எத்தனை தயக்கம் கொள்கிறோம்

நான் எடுத்த செயலை என்றும் பாதியில் விட்டதில்லை அதுதான் என்றும் என் வெற்றிக்கு காரணமாக அமைந்தது

நான் ஏழையாய் பிறந்ததை எண்ணி இன்றும் கர்வம் கொள்கிறேன் ஏன் தெரியுமா பணக்காரனிடம் கூட இல்லாத அந்த மென்மையான மனமும் குணமும் என்னிடம் இருப்பதை எண்ணி நான் என்றும் கர்வம் கொள்கிறேன்

உறுதியுடன் உழைத்துப் பார் வெற்றி உன் கதவை தட்டும்

நண்பா நினைவில் நிறுத்திக் கொள் காலம் உன்னை கடத்திச் செல்ல முயற்சிப்பதை நிறுத்து நீ உனக்கான காலத்தை கடத்தி செல்

யாரோ ஒருவருடைய கைகளை ஏன் நம்பி இருக்கிறாய் உனக்கும் கைகள் இருக்கிறது என்பதை மறக்காதே

இத்தனை தோல்விகளும் இதற்குத்தானா என்று பிறரை சிந்திக்க வை உனது வெற்றியினால் நண்பா

நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன் யாரோ ஒருவருடைய கேளிக்கை சொல்லாக இருக்க விரும்பவில்லை

வெற்றியோ தோல்வியோ சற்று முன்னோக்கி செல் இமயம் கையில்

உன்னை கணக்கிட இங்கு யாரும் தேவையில்லை உன்னை கணக்கிட ஒருவன் இருக்கிறான் என்றால் அது நீ மட்டும் தான்

நான் யார் என்பது உனக்கு தெரிந்திருக்கும் பொழுது நீ யார் என்பது உனக்கு தெரியவில்லையா சற்று சிந்தித்துப்பார் பதில் கிடைக்கும்

இன்றைய வெற்றியாளர் நாளைய தோல்வியாளன் ஆகலாம் இன்றைய தோல்வியாளர் நாளைய வெற்றியாளராகலாம். எனவே எதற்கும் அஞ்சாதே முன்னோக்கி செல் உனக்கான வெற்றிப் படி காத்திருக்கும்

யார் என்ன சொல்கிறார்கள் என்பதில் இல்லை வாழ்க்கை உனது மனது என்ன சொல்கிறது உனக்கு என்பதை மட்டும் தெளிவு படுத்திக் கொள்

யாருடனும் உன்னை ஒப்பிட்டுக் கொள்ளாதே உன்னை வெல்ல யாராலும் முடியாது உன்னை வெல்ல ஒரு பலசாலி இருக்கிறான் என்றால் அது நீயாக மட்டுமே இருக்க முடியும்

நமது முன்னேற்றத்திற்கு ஒரு விலை உயர்ந்த படி இருக்கிறது என்றால் அது கல்வியாக மட்டும் தான் இருக்க முடியும்

வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் உன் கைகள் மட்டும் தான் உனக்கு பலம் என்பதை கடைசி வரை நினைவில் கொள்

நீ உன்னை நினைத்து சந்தோசப்படவில்லை என்றால் வேறு யாரை நினைத்து சந்தோஷப்பட போகிறாய் சொல்
